என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
நீங்கள் தேடியது "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா"
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
சென்னை:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில், தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அதிமுக பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது குறித்து ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 13 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில், தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அதிமுக பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
ஆனால், அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார். பின்னர் மீண்டும் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர், 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மூவரும் நேற்று வேலூர் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 1,457 கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony #Releaseofprisoners
சென்னை:
இந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டாரம் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். #MGRCenturyCeremony #Releaseofprisoners
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டாரம் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். #MGRCenturyCeremony #Releaseofprisoners
வேலூர் ஜெயிலில் இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர்:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று ஆண்கள் ஜெயிலில் இருந்து 12 பேர், பெண்கள் ஜெயிலில் இருந்து 2 பேர் என மொத்தம் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை:
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை 6 மணியளவில் கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று ஆயுள் தண்டனை கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில் 12-வது கட்டமாக மதுரை சிறையில் இருந்து குமரேசன், கருப்பையா, பெருமாள், சுப்பிரமணியன், பிச்சை, கனி ராஜா, பஞ்சராசு, நடேசன், மாதவன் ஆகிய 8 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதுவரை மதுரை மத்திய சிறையில் இருந்து 221 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து இன்று 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
பாளை சிறையில் இருந்து நேற்று காலையில் மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நெல்லை:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். பாளை மத்திய சிறையில் இருந்து ஏற்கனவே 6 கட்டமாக 41 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளின் நன்னடத்தைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 11-ந் தேதி மேலும் 44 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் 17-ந் தேதி 23 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 180 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் பாளை சிறையில் இருந்து மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை பாளை மத்திய சிறையில் இருந்து 238 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ஜெயிலில் இருந்து 11 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
மதுரை:
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து கைதிகள், பல்வேறு கட்டங்களாக நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் முருகன், கணேஷ்பாபு, கருப்பசாமி, பிரபு கண்ணன், ஆனந்தராஜ், ஆண்டிசாமி, சரவணன், ஜெயபால், ராஜா, ராஜசேகரன், பொன்வேல் ஆகிய 11 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
மதுரை ஜெயிலில் இருந்து இதுவரை 11 கட்டங்களாக 213 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. #CMBT #MGRBusStand
சென்னை:
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.
37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. தினமும் 2 ஆயிரம் பஸ்களையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.
இங்கிருந்து தினமும் 573 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பஸ்களுக்காக 6 பிளாட் பாரங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் செல்கின்றன.
சமீபத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மீதும், பிளாட்பார நுழைவாயிலிலும் இந்த பெயர் பலகைகள் உள்ளன. #CMBT #MGRBusStand
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.
37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. தினமும் 2 ஆயிரம் பஸ்களையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.
இங்கிருந்து தினமும் 573 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பஸ்களுக்காக 6 பிளாட் பாரங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் செல்கின்றன.
தி.மு.க. ஆட்சியின் போது கருணாநிதி இந்த பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். 2002-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். சென்னை புறநகர் பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
சென்னை:
சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.
நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது, விரக்தியின் வெளிப்பாடு. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர கட்சி கிடைக்காததால் புலம்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை.
தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் துணை தலைவி மைதிலிதேவி, கஜநாதன், டிராஸ்ளின் பிரகாஷ், சந்திரசேகர், ஓட்டேரி தமிழ் செல்வன் கராத்தே ரவி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், மாம்பலம் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.
நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர். புகழை அவர்கள் பரப்பவும் இல்லை. நந்தனம் திடலில் வெறும் 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். அதற்கே அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். என்றாலும், கூட்டம் சேர்க்க முடியவில்லை. இந்த விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் துணை தலைவி மைதிலிதேவி, கஜநாதன், டிராஸ்ளின் பிரகாஷ், சந்திரசேகர், ஓட்டேரி தமிழ் செல்வன் கராத்தே ரவி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், மாம்பலம் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். #MGRCenturyCeremony #Jayakumar #Susheela
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழாவாக இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாட்டுக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் முக்கிய பாடகராக வலம்வருகிறார்.
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. #MGRCenturyCeremony #Jayakumar #Susheela

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் அதிக அளவிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவின் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாட்டுக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் முக்கிய பாடகராக வலம்வருகிறார்.
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. #MGRCenturyCeremony #Jayakumar #Susheela
சென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. #ChennaiHC
சென்னை:
சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா இன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கென மிகப்பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC

×

X